பிக்பாஸ் வீட்டிலிருக்கும் போதே காதலியுடன் புதிய படத்தில் கமிட் ஆகியுள்ள தர்ஷன்..! – Cinema News In Tamil

பிக்பாஸ் வீட்டிலிருக்கும் போதே காதலியுடன் புதிய படத்தில் கமிட் ஆகியுள்ள தர்ஷன்..!

இந்த செய்தியைப் பகிர்க

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் வாரம் தான் இருக்கும் இடமே தெரியாமல் அமைதியாக வலம் வந்தவர் தர்ஷன். இவர் வனிதாவை எதிர்த்து பேசியதிலிருந்து யார் தவறு செய்தாலும் தட்டிக் கேட்கிறார் என்று மக்களிடையே அதிகளவில் பேசப்பட்டு வந்தார். இவருக்கென தனியாக ஆர்மி தொடங்கப்பட்டது. இதனால் கமலின் பாராட்டையும் அவர் பெற்றார். எனவே, அவரே இறுதி போட்டியாளராக வெற்றி பெறுவார் என பிக்பாஸ் வீட்டிலிருக்கும் பலரே கூற தொடங்கி விட்டனர்.

இந்நிலையில், அவர் நடிக்கவுள்ள ஒரு திரைப்படம் தொடர்பான செய்தி வெளியாகியுள்ளது. ரீலீங் பக்ஸ் புரடெக்‌ஷன்ஸ் பிரைவேட் லிமிட்டேட் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில்தான் தர்ஷன் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு ‘மேகி’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் தர்ஷனின் நிஜமான காதலியான சனம் ஷெட்டியே அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் என்பது கூடுதல் தகவலாகும்.

ஏற்கனவே, சனம் ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தர்ஷனுடன் அவர் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Recommended For You

About the Author: tamilan

Leave a Reply