பிக்பாஸ் சாண்டியின் வாழ்க்கை என்னால் தான் நாசமாகிறதா? நெட்டிசனின் கேள்விக்கு காஜல் பசுபதி அதிரடி பதில் – Cinema News In Tamil

பிக்பாஸ் சாண்டியின் வாழ்க்கை என்னால் தான் நாசமாகிறதா? நெட்டிசனின் கேள்விக்கு காஜல் பசுபதி அதிரடி பதில்

இந்த செய்தியைப் பகிர்க

பிக்பாஸ் சாண்டியும் பிக்பாஸின் முதல் சீசன் போட்டியாளருமான காஜல் பசுபதியும் காதலித்து திருமணம் செய்து கொண்டு அதன்பின் கருத்து வேறுபாட்டால் பிரிந்தனர் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான்.

அதன்பின் சாண்டி Sylvia என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அழகான பெண் குழந்தை ஒன்றும் உள்ளது.

இந்நிலையில் தற்போதைய பிக்பாஸ் குறித்து அவ்வப்போது டுவிட்டரில் கருத்து பதிவிட்டு வரும் காஜல் பசுபதி, சமீபத்தில், மற்றவர்களுக்கு அறிவுரை வழங்குவதற்கு முன் நீங்கள் அதை பின்பற்றுங்கள். நீங்கள் சாண்டி மீது அக்கறை, அன்பு வைத்திருக்கிறீர்கள். ஆனால் உங்களுக்கு நன்றாகவே தெரியும், சாண்டிக்கு இரண்டாவது வாழ்க்கை அமைந்துவிட்டது என்று. சாண்டி மீது நீங்கள் தற்போது காட்டும் அன்பால் அவரது மனைவி கஷ்டப்படமாட்டாரா? என நெட்டிசன் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

அவர் கூறுகையில், நான் இப்படி நடந்து கொள்வதால், சாண்டி மனைவியின் மனம் புண்பட்டுள்ளதா என்று போய் கேளுங்கள்?

நீங்கள் விரும்பும் வழியில் அவள் பதிலளிக்க போகிறாள் என்று நான் நினைக்கவில்லை. எங்கள் இருவருக்கும் நல்ல உறவு இருக்கிறது. உங்களை போல அவர் ஒரு போதும் என்னை அப்படி நினைத்தது இல்லை. கற்பனையை நிறுத்துங்கள். கேள்வி கேட்க வேண்டும் என்பதற்காக எதையும் கேட்காதீர்கள் என அதிரடியாக கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Recommended For You

About the Author: tamilan

Leave a Reply