பிக்பாஸின் டைட்டில் வின்னர் இவர்தான்! கஸ்தூரியிடம் ஓப்பனாக சொன்ன சாண்டி – Cinema News In Tamil

பிக்பாஸின் டைட்டில் வின்னர் இவர்தான்! கஸ்தூரியிடம் ஓப்பனாக சொன்ன சாண்டி

இந்த செய்தியைப் பகிர்க

பிக்பாஸில் கடைசி போட்டியாளராக சில தினங்களுக்கு முன் நுழைந்த நடிகை கஸ்தூரி, போட்டியாளர்கள் ஒவ்வொருவருடனும் தனித்தனியாக கலந்துரையாடி வருகிறார்.

அதன்படி தர்ஷனிடம் பேசிய கஸ்தூரி, நீ எதற்காக வந்தாய் என கேட்டப்போது, கொஞ்சம் கடன் இருந்தது, அதற்கான நாட்களை கடந்துவிட்டேன், இப்போது நான் ஓகே, இனி வரும் நாட்கள் கொஞ்சம் ஜாலியாகவும், டாஸ்க்கை நல்ல படியாகவும் பண்ணுவேன் என கூறினார், தர்ஷன்.

அப்போது அங்கிருந்த சாண்டி இந்த பிக்பாஸ் வீட்டில் சரியான போட்டியாளர் என்றால் தர்ஷன் தான், அவன் தான் இறுதி போட்டி வரைக்கு செல்வான், ஏன் இவன் கூட டைட்டில் வின் பண்ணுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று அனைவரும் கூறுவதாக கூறினார்.

ஒரு போட்டியாளராக இருந்து கொண்டு, சாண்டி தன்னை பற்றி பெருமை அடித்து கொள்ளாமல், தர்ஷன் ஜெயிப்பான் என்று கூறியது, உண்மையிலேயே அவருக்கு எப்படிப்பட்ட நல்ல மனசு என்பதை காட்டுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Recommended For You

About the Author: tamilan

Leave a Reply