விஜய், ரஜினி பற்றி மேடையில் மோசமாக பேசிய முன்னணி இயக்குனர்! ரசிகர்கள் கொந்தளிப்பு – Cinema News In Tamil

விஜய், ரஜினி பற்றி மேடையில் மோசமாக பேசிய முன்னணி இயக்குனர்! ரசிகர்கள் கொந்தளிப்பு

இந்த செய்தியைப் பகிர்க

ஜோக்கர் பட புகழ் இயக்குனர் மேடையில் ரஜினி மற்றும் விஜய் பற்றி தரக்குறைவாக பேசியதாக ரசிகர்கள் கடும் கோபத்தில் விமர்சித்து வந்தனர்.

“இந்த மேடையில அண்ணண் சீமான்கிட்ட ஒரு வேண்டுகோளா கேக்குறேன். சூப்பர் ஸ்டார், இளைய தளபதின்னு யார் யாரோ இருக்காங்க. நீங்க, நம்ம புள்ளைக்கு (முந்திரிக்காடு பட ஹீரோ) ஒரு பட்டத்தை வச்சு விடுங்க” என சீமானை பார்த்து ராஜூமுருகன் பேசினார்.

இதனால் கோபமான விஜய், ரஜினி ரசிகர்கள் அவர்பேசிய விடியோவை எடுத்து பதிவிட்டு சமூக வலைத்தளத்தில் தங்கள் கொந்தளிப்பை வெளிப்படுத்தி வந்தனர்.

இந்நிலையில் ராஜூமுருகன் ட்விட்டரில் இதற்கு விளக்கம் கொடுத்துள்ளார். “ஒரு இசை வெளியீட்டு நிகழ்வில் எந்த உள்நோக்கமும் இல்லாமல் உற்சாகப்படுத்துவதற்காக பேசப்பட்ட விசயம் அது. வார்த்தைகள் தவறாக அமைந்ததற்கு வருந்துகிறேன். ரஜினி அவர்களும், விஜய் அவர்களும் தங்களது உழைப்பால், அர்ப்பணிப்பால் தமிழ் சினிவாவின் இந்த உச்சங்களைத் தொட்டவர்கள். கலைத்துறையில் அவர்களது பங்களிப்பின் மேல் உயர்ந்த மரியாதை எப்போதும் எனக்கிருக்கிறது” என ட்விட் செய்துள்ளார் ராஜு முருகன்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Recommended For You

About the Author: tamilan

Leave a Reply