விஜய்க்கு இந்த தமிழ் படத்தை ரீமேக் செய்யவேண்டும் என்பது தான் பலநாள் விருப்பமாம்! – Cinema News In Tamil

விஜய்க்கு இந்த தமிழ் படத்தை ரீமேக் செய்யவேண்டும் என்பது தான் பலநாள் விருப்பமாம்!

இந்த செய்தியைப் பகிர்க

விஜய் தமிழ் சினிமாவை ஆளும் உச்ச நட்சத்திரம். இவருடைய படங்களின் வசூல் நிலவரங்களை எல்லாம் நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை.

மெர்சல், சர்கார் என தொடர்ந்து இரண்டு ரூ 250 கோடி வசூல் படங்களை கொடுத்தவர், இவர் இயக்குனர் பி.வாசுவுடன் ஒரு படத்தில் இணைந்து பணியாற்ற இருந்ததாம்.

அப்போது கதை விவாதத்தின் போது ‘சார் எனக்கு நடிகன் படத்தை ரீமேக் செய்ய வேண்டும்’ என்று இரண்டு முறை அவரிடமே சொன்னதாக கூறியுள்ளார்.

நடிகர் சத்யராஜ், குஷ்பு, கவுண்டமணி, மனோரமா ஆகியோர் நடித்து மெகா ஹிட் ஆன படம், விஜய் சொன்னதை கேட்ட பி.வாசுவும், ‘ஓகே விஜய் பண்ணலாம், மனோரமா கதாபாத்திரத்திற்கு ஹேமமாலினியை கமிட் செய்யலாம்’ என கூறினாராம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Recommended For You

About the Author: tamilan

Leave a Reply