சாண்டி, கவின் பற்றி உண்மையை கொட்டிய பிரபல நடிகர்! மறைத்து வைத்திருக்கும் விசயம் – Cinema News In Tamil

சாண்டி, கவின் பற்றி உண்மையை கொட்டிய பிரபல நடிகர்! மறைத்து வைத்திருக்கும் விசயம்

இந்த செய்தியைப் பகிர்க

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 தற்போது 4 வாரங்களை கடந்துள்ளது. வந்த போட்டியளர்களில் பாத்திமாபாபு மற்றும் வனிதா இருவரும் வெளியேற்றப்பட்டுவிட்டனர்.

இதில் உள்ளே இருக்கும் போட்டியாளர்களில் ஆண்கள் பிரிவில் மக்கள் பலரையும் கவர்ந்தவர் நடன இயக்குனர் சாண்டி. காமெடி செய்து அனைவரிடமும் ஜாலியாக இருக்கிறார்.

கமல் ஹாசன் கூட அவரை அப்படியே இருக்குமாறு கூறினார். அதே போல நடிகர் கவின் காதல் மன்னன் போல வலம் வருகிறார். இந்நிலையில் நடிகர் ரியோ சாண்டி, கவின் பற்றி உண்மையை கூறியுள்ளார். சாண்டிக்கு கோபம் அதிகம் வரும், நான் பார்த்திருக்கிறேன், அவர் என்னுடைய நண்பன், அவர் அழமாட்டார் என நினைத்தேன், ஆனால் அவர் அழுதது எனக்கு ஷாக் தான்.

அதே போல கவினையும் எனக்கு தெரியும் என் ரூமில் இருக்கும் நண்பர் ராஜூவை பார்க்க வருவான். ஆனால் அவன் அமைதியாக தான் இருப்பான், அதிகம் பேசமாட்டான்.

ஆனால் பிக்பாஸ் வீட்டில் பேசுகிறான். ஒருவேளை அவன் உள்ளே பேசாமல் இருந்தால் அவனை யாருக்கும் தெரியாமல் போய்விடும் என கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Recommended For You

About the Author: tamilan

Leave a Reply