பிக்பாஸில் எனது ஆதரவு இவருக்கு தான்! முன்னாள் போட்டியாளர் காஜல் பசுபதி – Cinema News In Tamil

பிக்பாஸில் எனது ஆதரவு இவருக்கு தான்! முன்னாள் போட்டியாளர் காஜல் பசுபதி

இந்த செய்தியைப் பகிர்க

பிக்பாஸில் இந்த வாரத்தில் வனிதா விஜயகுமார், சரவணன், மீரா மிதுன், மோகன் வைத்யா, மதுமிதா ஆகியோர் வெளியேற்றப்படுவோரின் பட்டியலில் உள்ளனர்.

குறிப்பாக, வனிதா பிக்பாஸ் நிகழ்ச்சியின் வில்லியாக ரசிகர்களால் கருதப்படும் நிலையில் நடன இயக்குநர் சாண்டி, லாஸ்லியோ உள்ளிட்டோர் அனைவராலும் பாராட்டப்படும் நபர்களாக மாறியுள்ளனர்.

இந்நிலையில் நடன இயக்குநர் சாண்டியின் முன்னாள் மனைவியும், நடிகையுமான காஜல் பசுபதி சமீபத்தில் அளித்த பேட்டியில் பிக்பாஸ் வீட்டில் பிரச்னைகளுக்கு காரணமாக இருப்பவர் வனிதாதான். லாஸ்லியா தனியாக திட்டமிட்டு விளையாடுகிறாரா என்று தெரியவில்லை. ஆனால் ஒரு விஷயம் தவறு என்று தெரிந்தால் சாண்டியாக இருந்தாலும், லாஸ்லியா, தர்ஷனாக இருந்தாலும் அந்த இடத்திலேயே பேசினால் நன்றாக இருக்கும்.

பிக்பாஸ் வீட்டில் ஆல் இன் ஆல் அழகு ராணி லாஸ்லியா தான். பிக்பாஸ் 3 டைட்டிலை சாண்டி ஜெயிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Recommended For You

About the Author: tamilan

Leave a Reply