பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது மூன்றாவது சீசன் தொடங்கி வெற்றிகரமாக ஒரு வாரத்தை கடந்துள்ளது, இந்த வீட்டிலிருந்து முதல் ஆளாக எலிமினேட் ஆனது பாத்திமாபாபு தான்.
இவர் வீட்டை விட்டு வெளியே வந்ததும் கமலிடம் மற்ற போட்டியாளர்கள் குறித்து பேசினார், இதில் ‘வனிதா தான் அந்த வீட்டில் எல்லோரையும் கண்ட்ரோல் செய்கின்றார்.
அவருடைய பேச்சை சாக்ஷி, அபிராமி, ரேஷ்மா, ஷெரின் எல்லாம் கேட்கின்றனர், அதே நேரத்தில் சேரன், சாண்டி எல்லாம் நமக்கு எதற்கு வம்பு என்று ஒதுங்கியே நிற்கின்றனர்.
மேலும், லொஸ்லியா, தர்ஷன் எல்லாம் வனிதாவிற்கு அடங்கி செல்கின்றனர், மோகன் வைத்யா யார் குரல் சத்தமாக உள்ளதோ, அவருடங்கள் மிங்கிள் ஆகின்றார், மதுமிதா மட்டுமே அவராகவே உள்ளார் என கூறியுள்ளார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!