மதுமிதா அந்த வார்த்தைய சொன்னது இதுக்காக தான்! பல விசயங்களை ஓப்பனாக சொன்ன பிரபல நடிகர் – Cinema News In Tamil

மதுமிதா அந்த வார்த்தைய சொன்னது இதுக்காக தான்! பல விசயங்களை ஓப்பனாக சொன்ன பிரபல நடிகர்

இந்த செய்தியைப் பகிர்க

பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் வாரம் முடிந்து இரண்டாம் வாரத்தில் முதல் வெளியேற்றம் (Eviction) நடைபெறவுள்ளது. 100 நாட்கள் கொண்ட இந்த கேம் ஷோவில் நாமினேசனுக்கு மதுமிதா, சரவணன், கவின், பாத்திமா பாபு, சாக்‌ஷி, ஆகியோர் பரிந்துரை செய்பட்டுள்ளனர்.

இதில் மதுமிதா அதிக ஓட்டுகள் பெற்றுள்ளதால் காப்பாற்றப்பட்டார். அதே வேளையில் பாத்திமா தான் வெளியேறுகிறார் என்று தகவல் வெளியாகிவிட்டது.

மதுமிதா தேம்பி அழுததை நீங்களும் பார்த்திருப்பீர்கள். இந்நிலையில் மதுமிதா பற்றி பல விசயங்களை முன்னாள் போட்டியாளர் டேனி கூறியுள்ளார். பேட்டியில் அவர் மதுமிதாவை எனக்கு நீண்டநாட்களாக தெரியும். பிக்பாஸ் பற்றி அண்மையில் என்னிடம் கேட்டார். மதுமிதாவும் பெண் தான். அவளும் மனுஷி தானே.

கோபம், அழுகை, சண்டை எல்லாம் அவளுக்கும் வரும். சாதாரண கட்டுப்பாடான குடும்ப பின்னணியிலிருந்து தான் வந்துள்ளார். தமிழ் கலாச்சாரம் என்று சொன்னதில் அவர் தன்னுடைய பின்னணியை கொண்டு தான் சொன்னார். ஆனால் அது மற்றவர்களால் சரியாக புரிந்துகொள்ளப்படவில்லை.

கேரக்டர் அசேசினேசன் என சொல்கிறார்கள். அபிராமி, சாக்‌ஷி ஆகியோர் தான் தகாதவார்த்தைகளால் பேசுகிறார்கள். அதே போல வனிதா எல்லோரிடமும் கோபப்படுகிறார் என கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Recommended For You

About the Author: tamilan

Leave a Reply