தும்பா – முன்னோட்டம் – Cinema News In Tamil

தும்பா – முன்னோட்டம்

இந்த செய்தியைப் பகிர்க

ஹரிஷ் ராம்.எல்.எச். இயக்கத்தில் தர்ஷன், கீர்த்தி பாண்டியன் மற்றும் தீனா நடிப்பில் உருவாகி இருக்கும் `தும்பா’ படத்தின் முன்னோட்டம்.

ரீகல் ரீல்ஸ் மற்றும் ரோல் டைம் ஸ்டுடியோஸ் சார்பில் சுரேகா நியாபதி தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் தும்பா.

தர்ஷன், கீர்த்தி பாண்டியன் மற்றும் தொலைக்காட்சி புகழ் தீனா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏற்கனவே குழந்தைகளின் செல்லமாக மாறி விட்ட டைக்ரஸ் தும்பா இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரமாக வருகிறது.

ஒளிப்பதிவு – நரேன் இளன், படத்தொகுப்பு – ஆர்.கலைவாணன், இசை – அனிருத், விவேக்-மெர்வின், சந்தோஷ் தயாநிதி, சண்டைப்பயிற்சி – ஆக்‌ஷன் 100, ஒலி வடிவமைப்பு – டி.உதயகுமார், வசனம் – ராம் ராகவ், ஏ ஆர் பிரபாகரன், ஆடை வடிவமைப்பு – வாசுகி பாஸ்கர், பல்லவி சிங், தயாரிப்பு – சுரேகா நியாபதி, எழுத்து, இயக்கம் – ஹரீஷ் ராம்.எல்.எச்.

இயக்குனர் ஹரிஷ் ராம் எல்.எச். கூறும்போது,

அட்வென்ச்சர், ஃபேண்டஸி படமாக உருவாகி இருக்கும் இது ஒரு குடும்ப பொழுதுபோக்கு படமாக, குறிப்பாக குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் படமாக இருக்கும். வாகமோன், இடுக்கி, பாலக்காடு, சென்னை மற்றும் குமுளி ஆகிய இடங்களில் படப்பிடிப்பை நடத்தி முடித்திருக்கிறோம். பார்வையாளர்களால் வெறுமனே படத்தை மட்டும் ரசிக்காமல், இந்த இடங்களின் அழகிய காட்சிகளையும் நிச்சயம் ரசிப்பார்கள் என்றார்.

தும்பா டிரைலர்:

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Recommended For You

About the Author: tamilan

Leave a Reply