மிஸ்டர்.லோக்கல் – முன்னோட்டம் – Cinema News In Tamil

மிஸ்டர்.லோக்கல் – முன்னோட்டம்

இந்த செய்தியைப் பகிர்க

எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் – நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் `மிஸ்டர்.லோக்கல்’ படத்தின் முன்னோட்டம்.

ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `மிஸ்டர்.லோக்கல்’.

சிவகார்த்திகேயன் நாயகனாகவும், நயன்தாரா நாயகியாகவும் நடித்திருக்கின்றனர். ராதிகா சரத்குமார், சதீஷ், யோகி பாபு, தம்பி ராமையா, ரோபோ சங்கர், ஹரிஜா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இசை – ஹப்ஹாப் தமிழா ஆதி, ஒளிப்பதிவு – தினேஷ் கிருஷ்ணன் & ஆர்தர் ஏ.கிங், படத்தொகுப்பு – விவேக் ஹர்ஷன், கலை – சுப்ரமணிய சுரேஷ், சண்டைப்பயிற்சி – அன்பறிவ், ஆடை வடிவமைப்பு – அனு வர்தன், நீராஜா கோனா, பி.செல்வம், சிகை அலங்காரம் – வினோத் சுகுமாரன், பாடல்கள் – கே.ஆர்.தரண், மிர்ச்சி விஜய், ரோகேஷ், நடனம் – தினேஷ்குமார், ஒலி வடிவமைப்பு – டி.உதயகுமார், தயாரிப்பு – கே.ஈ.ஞானவேல் ராஜா, எழுத்து, இயக்கம் – எம்.ராஜேஷ்.

படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதாவது,

இது மிகவும் எளிமையான ஒரு பொழுதுபோக்கு படம். டிவியில் இருந்த காலத்திலேயே ராஜேஷ் சாருடன் பணிபுரியும் ஆசை எனக்கு இருந்தது. எஸ்எம்எஸ் படத்தில் ஒரு சின்ன இடத்தில் நான் டப்பிங் பேசியிருக்கிறேன். அதன் பிறகு ராஜேஷ் சார் முயற்சி எடுத்து அமைத்து கொடுத்த படம் தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம். என் கேரியரில் மிக முக்கியமான படம். அடுத்தடுத்து பேச்சுவார்த்தை நடந்தது, எப்படியாவது அவருடன் ஒரு படம் பண்ணிடனும் என்ற ஆசை எனக்குள் இருந்தது. அந்த ஆசை இந்த படத்தில் நிறைவேறி இருக்கிறது. நயன்தாரா உடன் இரண்டாவது படம். வேலைக்காரன் படத்தில் பெரிய அளவில் அவருக்கும் நடிக்க வாய்ப்பு கொடுக்க முடியாமல் போய்விட்டது.

இந்த படத்தில் அவர் படம் முழுக்க வருவார். இசையமைப்பாளர் ஆதி படத்துக்கு என்ன தேவையோ அதை சிறப்பாக கொடுக்கிறார். பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் கலக்கியிருக்கிறார். இந்த படத்தை மிகவும் கலர்ஃபுல்லாக கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன். இனிமேல் 6 மாதத்துக்கு ஒரு முறை நல்ல நல்ல படங்கள் மூலம் உங்களை சந்திப்பேன். ரசிகர்கள் தான் என் பலம், நீங்கள் கொடுக்கும் ஊக்கம் தான் என்னை மென்மேலும் உயர்த்துகிறது என்றார்.

மிஸ்டர்.லோக்கல் டிரைலர்:

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Recommended For You

About the Author: tamilan

Leave a Reply