அந்த நிமிடம் – முன்னோட்டம் – Cinema News In Tamil

அந்த நிமிடம் – முன்னோட்டம்

இந்த செய்தியைப் பகிர்க

ஆர்.குழந்தை ஏசு இயக்கத்தில் ருத்ரா – நொஷின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அந்த நிமிடம்’ படத்தின் முன்னோட்டம்.

எல்.டபிள்யூ. பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘அந்த நிமிடம்’.

இந்தப் படத்தில் சில தமிழ், மலையாளப் படங்களில் கதாநாயகனாக நடித்த நடிகர் ருத்ரா நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக அமெரிக்காவைச் சேர்ந்த நடிகை நொஷின் கதாநாயகியாக நடித்திருக்கிறார். சிங்கள மொழிப் படங்களில் கதாநாயகனாக நடித்த லால் வீரசிங் வில்லனாக தமிழில் அறிமுகமாகிறார். பல சிங்கள மொழிப்படங்களில் நடித்தும், இயக்கியவருமான சன்ன பெராரா இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக வருகிறார்.

ஒளிப்பதிவு – தங்கையா மாடசாமி, இசை – எஸ்.என்.அருணகிரி, பின்னணி இசை – சஜித் ஆண்டர்சன், எடிட்டிங் – எல்.வி.கே.தாஸ், சண்டைப்பயிற்சி – எஸ்.ஆர்.முருகன், நடனம் – ரேகா, கலை – செல்வராஜ், பாடல்கள் – அருண்பாரதி, தயாரிப்பு – ஆர்.குழந்தை ஏசு, மஞ்சுளா டி சில்வா, எழுத்து, இயக்கம் – ஆர்.குழந்தை ஏசு.

ஒருவர் ஒரு நிமிடத்தில் சிந்திக்காமல் செய்கின்ற தவறு அவர் குடும்பத்தை மட்டுமில்லாமல், மற்ற குடும்பத்தினரையும் எப்படி சீரழித்து சின்னா பின்னாமாக்குகிறது என்ற கருத்தை வலியுறுத்தும் படமாக ‘அந்த நிமிடம்’ உருவாக்கப்பட்டிருக்கிறது.

இந்தப் படத்தை கே.பாலசந்தர், எஸ்.பி,.முத்துராமன் போன்ற பிரபலமான முன்னணி இயக்குனர்களிடம் உதவியாளராக பணியாற்றிய ஆர்.குழந்தை ஏசு இயக்குகிறார். இவர் ஏற்கனவே ‘சிங்கமச்சான் சாலி’, ‘லீடர்’, ‘கோத்ரா’ போன்ற சிங்களப் படங்களை இயக்கியவர். முதல்முறையாக ‘அந்த நிமிடம்’ படத்தை தமிழில் இயக்கி தமிழ்த்திரையுலகில் இயக்குனராக அறிமுகமாகிறார். படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Recommended For You

About the Author: tamilan

Leave a Reply