முந்திரிக்காடு – முன்னோட்டம் – Cinema News In Tamil

முந்திரிக்காடு – முன்னோட்டம்

இந்த செய்தியைப் பகிர்க

மு.களஞ்சியம் இயக்கத்தில் சீமான், கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சி.மகேந்திரனின் மகன் புகழ் நாயகனாக நடிக்கும் ‘முந்திரிக்காடு’ படத்தின் முன்னோட்டம்.

தமிழர் நலம் கலை பண்பாட்டு இயக்கம் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படம் ‘முந்திரிக்காடு’.

இந்த படத்தில் இயக்குனர் சீமான் போலீஸ் அதிகாரியாக கதையின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நாயகனாக புகழ் என்பவர் அறிமுகமாகிறார். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரனின் மகன். கதாநாயகியாக சுபபிரியா நடிக்கிறார். இவர்களுடன் ஜெயராவ், சோமு, சக்திவேல், ஆம்பல் திரு, கலைசேகரன், பாவா லட்சுமணன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – ஜி.ஏ.சிவசுந்தர், இசை – ஏ.கே.பிரியன், படத்தொகுப்பு – எல்.வி.கே.தாஸ், பாடல்கள் – கவிபாஸ்கர், கலை – மயில்கிருஷ்ணன், ஸ்டண்ட் – லீ.முருகன், தயாரிப்பு மேற்பார்வை – டி.ஜி. ராமகிருஷ்ணன், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – மு.களஞ்சியம்.

படம் பற்றி இயக்குனரிடம் கேட்டபோது, “ ‘முந்திரிக்காட்டு மக்களின் வாழ்க்கை படம். யதார்த்தத்தை இதில் பிரதிபலித்திருக்கிறோம். விலை உயர்ந்த பொருளாக மாறிப்போன முந்திரியின் விளை நிலங்களில் சிந்தும் ஏழ்மையின் வியர்வை துளி எப்படிப்பட்டது என்பதை பதிவு செய்கிறோம் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Recommended For You

About the Author: tamilan

Leave a Reply