கேரவனுக்குள் சென்று அழுதேன்.. நடிகை நித்யா மேனன் உருக்கமான பேட்டி – Cinema News In Tamil

கேரவனுக்குள் சென்று அழுதேன்.. நடிகை நித்யா மேனன் உருக்கமான பேட்டி

இந்த செய்தியைப் பகிர்க

மெர்சல் படத்திற்கு பிறகு தற்போது ஜெயலலிதாவாக The Iron Lady படத்தில் நடிக்க தேர்வாகியுள்ளார் நடிகை நித்யா மேனன்.

இவரை பற்றி மலையாள சினிமாவில் சில தயாரிப்பாளர்கள் அவதூறு பரப்பி வருகின்றனர். அதனால் இவருக்கு அங்கு அதிக பட வாய்ப்புகள் வருவதில்லை என கூறப்படுகிறது.

இது பற்றி ஒரு பேட்டியில் நித்யா மேனன் பேசியுள்ளார், “முன் அனுமதி பெறாமல் சில தயாரிப்பாளர்கள் குழுவாக என்னை Thatsamayam Oru Penkutty படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சந்திக்க வந்தனர். அவர்களை நான் சந்திக்க மறுத்ததால் அவர்கள் என்னை பற்றி தவறாக பேசி வருகின்றனர்.”

“என்னுடைய அம்மா கான்சரால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அந்த சமயத்தில் நான் கடும் சோகத்தில் இருந்தேன். அடிக்கடி கேரவனுக்குள் சென்று கதறி அழுவேன். அந்த சமயத்தில் தான் இந்த தயாரிப்பாளர்கள் என்னை சந்திக்க வந்தனர். நான் யாரையும் சந்திக்கும் மனநிலையில் இல்லை என கூறிவிட்டேன். ஆனால் நான் திமிர் காரணமாக தான் இப்படி செய்தேன் என தவறாக புரிந்துகொண்டு என்னைப் பற்றி தவறாக பேசிவருகின்றனர்.”

“இருப்பினும் அதை பற்றி கவலைப்படபோவதில்லை. என நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்த போகிறேன்” என கூறியுள்ளார் நித்யா மேனன்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Recommended For You

About the Author: tamilan

Leave a Reply