காதலை மறைக்கும் பிரபல ஜோடி – Cinema News In Tamil

காதலை மறைக்கும் பிரபல ஜோடி

இந்த செய்தியைப் பகிர்க

தமிழ் சினிமாவில் பிரபலமான வளர்ந்து வரும் நடிகரும், நடிகையும் தங்களது காதலை ரகசியமாக வைத்திருக்கிறார்களாம்.

ஒரு இயக்குநரின் பெயரையும், அப்பாவின் பெயரையும் தனது பெயராக வைத்திருக்கும் நாயகன் சத்தமில்லாமல் சினிமாவில் வலம் வருகிறாராம். அவரது நடிப்பில் வரும் படங்களும் சத்தமில்லாமல் வந்து செல்கிறதாம்.

அவருக்கும் அவரது நீண்ட நாள் தோழியுமான பிரியமான நடிகையும் காதலித்து வந்தார்களாம். தொடர்ந்து படங்களிலும் இணைந்து நடித்தார்களாம்.

இருவருக்குமே பட வாய்ப்புகள் குறைந்ததற்கு அவர்களின் காதலும் ஒரு காரணம் என்று கூறினார்களாம். ஒரு கட்டத்தில் இருவரும் பிரிந்து விட்டதாக தகவலும் வெளியானதாம்.

ஆனால் இருவரும் நட்புடன் தான் இருக்கிறார்களாம். ஆனால் வெளியே இருவரும் பிரிந்து இருப்பது போல் காட்டிக் கொள்கிறார்களாம்.

இரண்டு பேரும் நடித்து சம்பாதித்தபின், தகுந்த நேரம் பார்த்து தங்களின் காதலையும், திருமண தகவலையும் அறிவிப்பார்களாம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Recommended For You

About the Author: tamilan

Leave a Reply